NEWS

  • பாடசாலைக் காலத்தில் எனது சேவையைப் பெற்றோருக்கும் கல்விப்புலத்திற்கும் அறியச் செய்வதற்காகத் தொடங்கப்பட்ட இவ்விணையத்தளம், எனது சேவை முடிவுறுத்தப்படுவதனால் இன்றுடன் நிறைவடைகின்றது.



30.11.2015
இன்று நான் ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றேன். எனது ஓய்வை முன்னிட்டு பாடசாலைச் சமூகம் மிகவும் சிறப்பாக சேவைநயப்புவிழாவை நடத்தியது.

14.10.2015 

இன்று தரம் 1,2மாணவர்களின் நவராத்திரி விழாவின்  இரண்டாம் நாள் நிகழ்வுகள் இடம் பெற்றன. மாணவர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டுப், பின்னர்  நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

  நவராத்திரி விழாவை முன்னிட்டு கோலம் போடுதல்,  பண்ணிசை, தோரணம் செய்தல் போட்டிகள் நடைபெற்றன.


08.10.2015 

இன்று எமது பாடசாலையில்  ஆசிரியா் தினம் மாணவர்களாலும் பழைய மாணவர் சங்கத்தினாலும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரியின் கல்வியும் தரமேம்பாட்டுக்குமான இணைப்பாளராகிய திரு.S.தவனேசன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். 
  
23.09.2015 


வலயமட்ட சிறுவர் சித்திரப்  போட்டியில் தரம் 2 மாணவி செல்வி.தனிஷா 1ஆம் இடத்ததைப் பெற்று, 26.09.2015 மாகாண மட்டப் போட்டியில் பங்குபற்றவுள்ளார்.


19, 20.09.2015 

CLASSROOM BEST PRACTICE - SBTD PROJECT 


 இலங்கை கல்விஅமைச்சினால் தெரிவுசெய்யப்பட்ட எமது பாடசாலையில் 2014இல் நடைமுறைப்படுத்தப்பட்ட  SBTD யின் BEST PRACTICE ஆன ”2014 தரம் 1 மாணவரின் வாசிப்புத்திறனை மேம்படுத்த தேடலுக்காக இணையத்தளங்களை        உருவாக்கி e-learning செயற்பாட்டுக்குச் சந்தர்ப்பம் வழங்கல்” என்னும் ஆசிரியர் திருமதி த.சூரியகுமாரனின்(எனது) செயற்றிட்டம் மேற்படி இருநாட்களும் கல்வி அமைச்சின் கேட்போர்கூடத்தில் (இசுறுபாய)ஆசிரியரின் குரலொலியில் Recording செய்யப்பட்டது 


05, 06.09.2015 

இவ்விரு நாட்களும் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளளர்களும், முகிழ்நிலை மாணவர்களுமாக 52பேர் எமது பாடசாலைக்கு வருகை தந்து ”பாடசாலை நோக்கிய சமூகம்” என்னும் தமது செயற்றிட்டமூடாக எமது பாடசாலையின் மனிதவலுத் தேவைகளை நிறைவு செய்தனர். அவ்வகையில் தரம் 2 வகுப்பறைக்கும் தமது செயற்பாட்டை மேற்கொண்டனர்.

16.07.2015 

  இன்று ஆரம்பப்பிரிவு  மாணவர்களின்  கணித செயற்பாட்டு முகாம் ஆரம்பப்பிரிவு பகுதித்தலைவர் திருமதி த.சூரியகுமாரன் ஒழுங்கமைப்பில்  வித்தியாலய முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்குப் பிரதம விருந்தினராகத் தென்மராட்சிக்கல்வி வலயப் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு.வே.பாலசுப்பிரமணியம் (கல்வி நிர்வாகம்) அவர்களும், சிறப்பு விருந்தினராகத் தென்மராட்சிக் கல்வி வலய ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் திரு.செ. மனோரஞ்சிதன் அவர்களும்  கலந்து சிறப்பித்தனர்.
   தரம் 2 மாணவர்களின் கணித அடிப்படை எண்ணக்கருக்கள், அத்தியாவசியக் கற்றற் தேர்ச்சிகள் விருத்திக்கான 16 செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


SPECIAL ACTIVITIES

8.06.20105

 தரம் 1, 2 மாணவர்களுக்கான தென்மராட்சிக் கல்விவலயத்தினால்  தயாரிக்கப்பட்ட பல்மட்டக் கற்றல், கற்பித்தலுக்கான செயலட்டைகளின் அமுலாக்கத்திற்கான செய்முறை விளக்கப்பயிற்சி  , யா/சாவகச்சேரி இந்துஆரம்பப் பாடசாலையில் இன்று நடைபெற்ற போது , வலயப் பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தவதற்காக நடைபெற்ற செய்முறைவிளக்கக் கண்காட்சியில் மாதிரிவகுப்பு ஒன்றை எமது பாடசாலை தரம் 2 வகுப்பாசிரியர்  திருமதி த.சூரியகுமாரன் அவர்களும் தமது வகுப்பு  மாணவர்களைப் பயன்படுத்திச் செயற்படுத்தியிருந்தார்.
 இந்நிகழ்வில் மாகாணக்கல்விச் செயலாளர், மாகாணக்கல்விப் பணிப்பாளர், வலயக்கல்விப் பணிப்பாளர், வலயக் கல்வி அதிகாரிகள், வலயப்பாடசாலை அதிபர்கள், கைதடி முதல் கெற்பெலி ஈறாகப் பாடசாலைகளின் ஆரம்பக்கல்வி ஆசிரியர்கள் மற்றும்  பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கற்பித்தல்முறையை அறிந்து கொண்டனர்.  இதனைத்தொடர்ந்து பாடசாலை அதிபர்களிடம் செயலட்டைத் தொகுதி வழங்கப்பட்டு, நாளை தொகுதி தொகுதியாக ஏனைய பாடசாலைகள் இணைந்து இவற்றை நடைமுறைப்படுத்திச் செயற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

28.05.2015
இன்று தரம் 1, 2 மாணவர்கள் இணைந்து பெற்றோர் உதவியுடன் தமது இணைபாடவிதானச் செயற்பாடாக காய்கறிகளின் சத்துக்களை அறிந்தும், அணியினராக இணைந்து பாடலைப் பாடியும் மரக்கறி சூப்(Soup) தயாரித்து அருந்தி மகிழ்ந்தனர்.



26.05.2015

“மொழியாரம்“   செயற்பாட்டுமுகாம்

இன்று தரம் 2 மாணவர்களின் கற்றல் மேம்பாட்டு செயற்பாட்டு வரிசையில்  அத்தியாவசிய கற்றல் தேரச்சிகளை அடைவதற்கான தமிழ்மொழித்திறன்  விருத்திக்கான  “மொழியாரம்“ செயற்பாட்டுமுகாம் காலை 9.00மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது. பொறுப்பாசிரியர் திருமதி த.சூரியகுமாரன் ஒழுங்கமைப்பில் பெற்றோர்களும் ஏனைய ஆரம்பக்கல்வி ஆசிரியர்களும் ஆசிரியர் கலாசாலை ஆசிரிய மாணவர்களும் இணைந்து செயற்படுத்திய இம்முகாாில் பெற்றோரும் மாணவர்களின் செயற்பாடுகளை அவர்களுடன் சென்று அவதானித்து தகவல்தொடர்பாடல் தொழில்நுட்பத் தேர்ச்சி உட்பட 18  அத்தியாவசிய கற்றல் தேரச்சிகளையும் தமது பிள்ளைகள் எய்தியுள்ளனரா என்பதை உறுதி செய்துள்ளனர்.
   இந்நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராத் தென்மராட்சிக் கல்விவலய தொழில்வழிகாட்டலும் ஆலோசனையும் அதிகாரி திரு.க.ஈஸ்வரன் அவர்களுடன் வித்தியாலய முதல்வரும் கலந்து வளப்படுத்தினர். ஆசிரியரின் வாண்மை இணையத்தளத்தில் வாசிப்பை மேற்கொண்ட மாணவர்களின் செயற்பாட்டுத் துலங்கல் சிறப்பாக இருந்தது அனைவரையும் கவர்ந்தது
தேசியமட்டத் தெரிவு


2014ஆம் ஆண்டு தரம் ஒன்று மாணவர்களுக்கு வாசிப்புத்திறனை மேம்படுத்த தேடலுக்காக வாண்மை,  சைவம் ஆகிய இணையத்தளங்களினூடாக கற்பித்தலை மேற்கொள்ளும் செயற்பாடானது கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்வி நிர்வாகப் பிரிவினால் பாடசாலைமட்ட ஆசிரியர் அபிவிருத்தித்திட்டத்தில் (SBTD) வெற்றிகரமான வகுப்பறைச் செயற்பாடாக   (CLASS ROOM BEST PRACTICE) தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் மாணவர்களின்  ஆளுமைவிருத்திக்கு அவர்களின் சாதனைகளையும்,  வகுப்பறை, பாடசாலையில்  பங்கேற்றுக் கற்கும் செயற்பாடுகளையும் www.vigneswaram.blogspot.com  என்னும் இணையத்தளத்தில்  பதிவு செய்து , இணையத்தளங்களைப் பார்வையிடும் முறைகளை பெற்றோர்களுக்கு அறியவைத்துச் செயற்படுவதும் குறிப்பிடத்தக்கது.




    12.05.2015

     ஸ்தாபகர் தினம்
      
         இன்று ஸ்தாபகர்தினம் நடைபெற்றது. பொதறிவுப் போட்டியில் வெற்றிபெற்ற  மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்கப்பட்டன.


    11, 12.05.2015

     2014 ஆம் ஆண்டு தரம் 1 மாணவர்களுக்கு இணையத்தளங்களை உருவாக்கி e-learning கற்பித்தலை மேற்கொண்ட செயற்பாடு தேசியரீதியில் தமிழ்மொழிமூல ஐந்து  பாடசாலைகளில் ஒன்றாக முதல் சுற்றில் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, NIE யில் நடைபெற்ற இவ்விருநாட்கள் செயலமர்வில் பங்குகொண்டேன்.

    08.05.2015

    ஸ்தாபகர் தினத்தையொட்டி இன்று பொதறிவுப் போட்டி நடைபெற்றது.


    03.05.2015

    இன்று பெற்றொர் சந்திப்பு நடைபெற்றது. 

    • இன்று மாணவர் மன்றம் நடைபெற்றது.


    20.04.2015

    சிரமதானம்

        இன்று எமது வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலைக்கு வருகைதந்து தமது பிள்ளைகளின் தரம் 2 வகுப்பறையைக் கழுவியும் தளபாடங்களைத்  தூய்மைப்படுத்தியும் உதவி  செய்தனர்.


    08.04.2015

    செய்திமடல் வெளியீடு

    இன்று எமது பாடசாலையினால் விக்கினேஸ்வரம் என்னும் செய்திமடல்  வெளியீடு செய்யப்பட்டது.  என்னால் உருவாக்கப்பட்ட  “விக்கினேஸ்வரம்” என்னும் செய்திமடலை அதிபரிடம் கையளித்ததைத் தொடர்ந்து, அதிபரிடமிருந்து   பிரதம விருந்தினரான கைதடி மக்கள் வங்கிக்கிளைப் பொறுப்பதிகாரி திரு.பூ.சீராளன் அவர்கள் பெற்று வெளியீடு செய்தார். முதல்பிரதியை சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்ட பழையமாணவரான லண்டன்வாழ் திரு.ச.ஸ்ரீஸ்கந்தராசா அவர்கள் பெற்றுக் கொண்டார். அதிகளவான பெற்றோர்கள் இந்நிகழ்வில் கலந்து தமது பிள்ளைகளின் செயற்பாடுகளை உள்ளடக்கிய விக்கினேஸ்வரம்  செய்திமடலைப்  பெற்றுக் கொண்டனர்.

      

    தவணை 1 -   2015 சாதனைகள்


    1. IMACS போட்டி 

    தரம் 2 , 3, 4, 5 ஆகிய வகுப்பு மாணவர் கலந்து கொண்ட போட்டி


    •      தரம் 2 மாணவி செல்வி வ.தனிஷா            - மூன்றாமிடம்  பெற்றுள்ளார். 



    2.. ஐக்கிய நாடுகள் உலக உணவு ஊட்டல் 

          நிகழ்ச்சித் திட்டம் - சித்திரப் போட்டி  -2015

            தரம் 1 – 9 வரையான வகுப்புக்களுக்கான சித்திரப் போட்டியில் தரம் 1 – 5 வரையான ஆரம்பப்பிரிவு மாணவர்கள் பங்குகொண்டனர். வலயமட்டத்தில் தெரிவான 5 சித்திரங்களுள்  தரம் 2 மாணவியின் சித்திரம் மூன்றாமிடத்தைப் பெற்று, இவர் மாகாணமட்டப்போட்டிக்குப்  பங்குபற்றியுள்ளார்.
    • தரம்2 மாணவி செல்வி து.ஷஜந்திகா          - மூன்றாமிடம் பெற்றுள்ளார்.

    12.03.2015

    வலயமட்ட வெளிவாரி மதிப்பீடு 

    இன்று தென்மராட்சிக் கல்விவலய வெளிவாரி மதிப்பீடு எமது பாடசாலையில் நடைபெற்ற போது, தரம் 2வகுப்பறையின் கவிநிலை பேணல், வகுப்பாசிரியர் (திருமதி த.சூரிய குமாரன்) அவர்களினால் நடைமுறைப்படுத்தப்படும் இணையத்தளங்கள் பார்வையிடப்பட்டும் “பாடசாலையின் BENCHMARK - தரம் 2 வகுப்பு கவிநிலை, இணையத்தளப்பயன்பாடு” எனக் குறிப்பிட்டுவலயக்கல்வி அலுவலக அதிகாரிகள் பாராட்டியது  குறிப்பிடத்தக்கது. 

    • இன்று மாணவர் மன்றம் நடைபெற்றது.


    07-08.03.2015

    வகுப்பறை கவிநிலை பேணல்


         தரம் இரண்டு வகுப்பு மாணவர்களின்  பெற்றோர் தமது பிள்ளைகள் கல்வி கற்கும் வகுப்பறையைக் கவிநிலைப்படுத்தத் தாமாக முன்வந்து பல்வேறு செயற்பாடுகளைச் செய்துள்ளனர். வகுப்பறைச் சுவருக்கு வர்ணம் தீட்டியும்,  உடைந்திருந்த நிலத்தைக்  கொத்தி அகற்றி, புதிய நிலத்தை அமைக்கவும்  அன்பளிப்பாகத் தாமே பொறுப்பேற்றுச் செய்துள்ளனர். இச்செயற்பாடுகளை தரம் 2 மாணவி செல்வி வ.தனிஷாவின்  பெற்றோரான திரு.சு.வரதராசா அவர்கள் பொறுப்பெடுத்து நிறைவேற்றியமை குறிப்பிடத்தக்கது.  ஏனைய பெற்றோரும் உதவிகளைச் செய்துள்ளனர். இச்செயற்பாடு வகுப்பறை கற்றல் சூழலுக்கு மேலும் துணை செய்துள்ளது. இத்தகைய சமூகப் பங்களிப்பை நல்கும் பெற்றோரைப் பாராட்டுகின்றோம்.

    16.02.2015

    வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு

    எமது பாடசாலையின் 2015 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு இன்று(16.02.2015) அமைதியான முறையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது


    27.01.2015

    இலைக்கஞ்சி காய்ச்சுதல் 

        தரம்இரண்டு மாணவர்கள் பெற்றோர்களின் உதவியுடன் பாடசாலையி்ல் இலைக்கஞ்சி தயாரித்து, ஆசிரியர்களுக்கும் கொடுத்துத் தாமும் பருகி மகிழ்ந்தனர். இலைக்கஞ்சி தயாரிக்கும் பணிகளில் தாமும் ஈடுபட்டு பயன்படுத்திய பல்வேறு இலைவகைகளை இனங்கண்டும் சத்தான பானத்தையும் அறிந்து  கற்றுக் கொண்டனர்.


    19.01.2015

    தரம்1 கால்கோள்விழா -19.01.2015

                இன்று  19.01.2015   தரம்1  கால்கோள் விழா மிகவும்  கோலாகலமாக  வித்தியாலய  முதல்வர் திரு.சு.சிவானந்தன் அவர்கள்  தலைமையில் நடைபெற்றது. கைதடி வீரகத்திப் பிள்ளையார் கோயிலில்   வழிபாட்டுடன்   தரம் 1   சிறார்கள் மாலை அணிவித்து, மங்கல வாத்தியத்துடன்    விருந்தினர்,    பெற்றோர்   சகிதம்   தரம் 2     மாணவர்          கைப்பிடித்து அழைத்து வர நடைபெற்றது    குறிப்பிடத்தக்கது.. பிரதம   விருந்தினராகத் தென்மராட்சிக் கல்வி  வலய  தொழில் வழிகாட்டல் ஆலோசனை அதிகாரி திரு.க.ஈஸ்வரன் அவர்களும்,  சிறப்பு   விருந்தினராக   எமது   வித்தியாலயத்தின்   பழைய மாணவனான லண்டன்வாழ் திரு.சங்கரப்பிள்ளை    ஸ்ரீஸ்கந்தராசா    அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இவர்களுடன் பாடசாலை அபிவிருத்திச் சபை,  பழைய மாணவர் சங்க உறுப்பினர்களும் பெற்றோர் களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆரம்பப்பிரிவு மாணவர்களின் கலை நிகழ்வு களும் இடம்பெற்றன. 





    2014

    14.11.2014  


    வாசிப்புமுகாமும் சஞ்சிகை வெளியீடும்(இதழ்-5)


       இன்று தரம் 1 மாணவர்களின் “வாசிப்பு முகாமும் சஞ்சிகை வெளியீடும்”(ஆலஞ்சிட்டு இதழ் 5) நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வுக்குப் பிரதம விருந்தினராக வடமாகாண ஓய்வுநிலை உதவிக்கல்விப் பணிப்பாளர் (ஆரம்பக்கல்வி)  திரு.R.இராஜேஸ்வரன்  அவர்களும், சிறப்பு விருந்தினராகத்  தென்மராட்சிக் கல்விவலய முறைசாராக்கல்வி ஆசிரிய ஆலோசகர் திருமதி சு.நகுலேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.


      உயர்மட்டக் கல்விச் செயற்பாடாக நடைபெற்ற இந்நிகழ்வில் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.   மாணவர்கள் விளையாட்டு முறையில் வாசிப்புத்திறனை மேம்படுத்தும் வாசிப்புச் செயற்பாடுகள்,  பேச்சு, ஆடல், பாடல் போன்ற விநோதச் செயற்பாடுகளுடன்,  E – learning  கற்றல்  செயற்பாடுகளை மல்ரிமீடியா பயன்படுத்தி அனைத்து மாணவர்களும் மேற்கொண்டனர் . அத்துடன் ஆசிரியரின் இணையத்தளத்தையும் காட்சிப்படுத்தினர்.


      . அடுத்து  ஒவ்வொரு மாணவரும் ஆக்கிய  ”ஆலஞ்சிட்டு இதழ் 5” கையெழுத்துச் சஞ்சிகை வெளியீடும் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள், மாணவர்கள் பார்வையிட்டனர்.



    10.11.2014

    பற்சிகிச்சை

        இன்று தரம் ஒன்று மாணவர்களுக்கு வைத்திய பரிசோதனை இடம்பெற்று, பற்சிகிச்சை அளிக்கப்பட்டது.




    03.11.2014


    ஆசிரியருக்கு மதிப்பளித்தல்


        தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிச் சித்தியெய்திய மாணவர்கள் தமது வகுப்பாசிரியருடன் தரம் 1, 2 இல் கல்வி கற்பித்தஆசிரியர் திருமதி த.சூரியகுமாரனையும் ஏனைய கற்பித்த ஆசிரியர்களையும் கௌரவித்தனர்.






    23.10.2014

    சமயபாடச் செயற்பாட்டின் போது மாலைகட்டல்


       நவராத்திரி விழாவையொட்டி மாணவர்கள் சமயபாடச் செயற்பாடாக மாலை கோர்த்துக் கட்டினர்.



    மாதிரிப் பிராணி ஆக்கம்


      மாணவர்கள் மரக்கறிகளைப் பயன்படுத்தி பல்வேறு ஆக்கங்கள் செய்தனர். பயன்படுத்திய மரக்கறிகளின் பெயரையும் ஆக்கத்தின் பெயரையும் ஒருவரோடு ஒருவர் கலந்துரையாடி அவற்றைக் காட்சிப்படுத்தி மகிழ்ந்தனர்.



    வலயமட்ட சித்திரப் போட்டி


        தென்மராட்சி கல்வி வலயத்தினால்  தர ரீதியாக நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியில் தரம் 1 மாணவி செல்வி வ.தனிஷா முதலாம் இடத்தைப் பெற்று,மாகாணப் போட்டியில் பங்குபற்றவுள்ளார்.


    வலயமட்டம் முதலாம் இடம்

    • செல்வி வ.தனிஷா


    20.06.2014

    பாடசாலைமட்ட சித்திரப் போட்டி



       வலயமட்டச் சித்திரப் போட்டிக்காக  மாணவர் களிடையே சித்திரப் போட்டி நடைபெற்றது.  மூன்று மாணவர்கள் சிறப்புத் தேர்ச்சியடைந்தனர்.

    சிறப்புத் தேர்ச்சியடைந்தோர்
    • வ.தனிஷா
    • து.ஷஐந்திகா
    • லி.துஷ்மிதா





    18.07.2014

    ஆடிப்பிறப்புக் கூழ் 


        இன்று  பாடசாலையில் ஆடிப்பிறப்புக் கூழ் காய்ச்சப்பட்டது. காலையில் வித்தியாலய மாணவர்கள் அனைவரும் இணைந்தும், பின் வகுப்பறையில் தரம் ஒனறு மாணவர்கள் இணைந்தும்  நவாலியுர் சோமசுந்தரப்புலவரின் ”ஆடிப்பிறப்புக்கு நாளை விடுலை ”என்ற பாடலைக் குழுவாகப் பாடி மகிழ்ந்ததுடன்,  ஆடிக்கூழும் பருகி மகிழ்ந்தனர்.




    26.05.2014 

    உணவு உலகம் செயற்பாட்டுக் கண்காட்சி


       உணவு உலகம் செயற்பாட்டுக் கண்காட்சி நடைபெற்றது. உணவு வகைகளை இனங்கண்டு பெயர் கூறவும், அவற்றைக் கூட்டங்களாக வகைப்படுத்திப் பெயர் கூறவும், வாண்மைபெறவும் இச்செயற்பாடு களமமைத்தது. வித்தியாலய முதல்வர் திரு.சு.சிவானந்தன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். ஆசிரியர்கள், மாணவர்கள் பார்வையிட்டனர்.



    E- Learning

     22.05.2014

      வகுப்பாசிரியரின் இணையத் தளத்தைப் பார்வையிட்டும், e-thaksalawa, www.noolagam.com, ixl போன்ற இணையத்தளங்களில் பயிற்சிகளையும் மேற்கொண்டனர்.


    20.05.2014

    புத்தாண்டு விழா

      சித்திரைப் புத்தாண்டுவிழா தரம் 1 , தரம் 2 ஆகிய வகுப்பு மாணவர்களால் கொண்டாடப்பட்டது..


    03.05.2014

    கணினிப் பயிற்சி

       கணினியில் கற்பதற்குப் பயிற்சி பெறுகின்றனர். ஆசிரியரின் Powerpoint இல் செய்த பாடவிடயங்களைத் தாமே தெரிவு செய்து கற்பதற்குப் பயிற்சி பெற்றனர்.


     08.04.2014

    EXHIBITION - GRADE ONE 


       தரம் 1 மாணவர்கள் தவணை 1இல் கற்ற விடயங்களை உள்ளடக்கிய செயற்பாட்டுக் கண்காட்சி நடைபெற்றது. வித்தியாலய முதல்வர் திரு.சு.சிவானந்தன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

     mouse பயிற்சி


       கணினியில் கற்பதற்குப் mouse பயிற்சி பெறுகின்றனர். ஆசிரியரின் வாண்மை, சைவம், விக்கினேஸ்வரம் இணையத்தளங்களை வாசித்துப் பயன்பெறவும், இணையத்தளத்தில் தம்  பாடங்களைத் தெரிவு செய்து கற்பதற்குப் பயிற்சி பெற்றனர்.




    16.01.2014

    தரம் 1 கால்கோள்விழா


       2014தரம் 1 கால்கோள்விழா நடைபெற்றது. பிரதமவிருந்தினர் தென்மராட்சிக் கல்விவலய விவசாயபாட ஆசிரிய ஆலோசகர் திரு.து.செல்வராசா(பாடசாலை PSI) அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.



    08.01.2014


    பிள்ளைகளை அறிவோம் செயற்பாட்டில்விளையாட்டு வீடு


     2014 தரம் 1 மாணவர்கள் பிள்ளைகளை அறிவோம் செயற்பாட்டில் பெற்றோர் கட்டிய விளையாட்டு வீட்டில் மகிழ்வுடன் விளையாடினர்.


    2013


    சஞ்சிகை வெளியீடு- இதழ் 4


    • மூன்றாம் தவணை இறுதியில் ஒவ்வொரு மாணவராலும் ஆக்கிய “ஆலஞ்சிட்டு - இதழ் 4”கையெழுத்துச் சஞ்சிகையைப் பிரதமவிருந்தினராகக் கலந்து சிறப்பித்த  தென்மராட்சிக் கல்விவலய ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு. N.சர்வேஸ்வரன் அவர்கள் வெளியீடு செய்தார்.சிறப்புவிருந்தினராகத் தென்மராட்சிக் கல்வி வலய ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகர் திரு.செ.மனோறஞ்சிதன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.


    2012

    2012தரம் 1 கால்கோள்விழா


    இன்று தரம் மாணவர்களின் கால்கோள்விழா நடைபெற்றது.



    சஞ்சிகை வெளியீடு - இதழ் 3


    • மூன்றாம் தவணை இறுதியில் ஒவ்வொரு மாணவராலும் ஆக்கிய “ஆலஞ்சிட்டு - இதழ் 2”கையெழுத்துச் சஞ்சிகையை ஆசிரியரிடம் இருந்து பெற்று, அதிபர் திருமதி ல.முகுந்தன் அவர்கள் வெளியீடு செய்து, பெற்றோரிடம் கையளித்தார். 





    2011


    தென்மராட்சிக் கல்விவலயத்தில் தரம் 2 பண்ணிசைப்போட்டி நடைபெற்றது.

                         வலயமட்ட பண்ணிசைப்போட்டி

    • பூ.சாருஜா - இரண்டாம்  இடம்



    25.11.2011

    இணையத்தளத்தை வலயக்கல்வி அதிகாரிகள் பார்வையிடல்

       இன்று பாடசாலை வலயமட்ட தரிசிப்பு நடைபெற்றது. மாணவர்களின் நிகழ்வுகளைத் தொகுத்த ஆசிரியர்ன் நிகழ்வுப் பதிவேடு பாராட்டுப் பெற்றது. அத்துடன் ஆசிரியரின் இணையத்தளத்தை வருகை தந்திருந்த தென்மராட்சிக்கல்வி வலய கல்வி அபிவிருத்தி பிரதிக்கல்விப்பணிப்பாளர் திரு.  சுந்தரசிவம் அவர்களும் தென்மராட்சிக்கல்வி வலய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப  ஆசிரியஆலோசகர் திருமதி சி.உருத்திரமூர்த்தி அவர்களும்,  தென்மராட்சிக்கல்வி வலய சேவைக்கால ஆசிரியஆலோசகர் திரு.தர்மராசா அவர்களும் கலந்து கொண்டு அவதானித்தமை குறிப்பிடத்தக்கது


    07.10.2011

                               கண்காட்சி

    இன்று பாடசாலை மட்டக் கண்காட்சி வித்தியாலய முதல்வர் திருமதி ல.முகுந்தன் அவர்கள் தலைமையில்  நடைபெற்றது. முதன்மை விருந்தினராக சாவகச்சேரிக் கோட்டக்கல்வி அதிகாரி திரு.கு.சிவானந்தன் அவர்களும், அயற்பாடசாலை அதிபர்களும் ஆசிரியர்களும் பார்வையிட்டுச்  சிறப்பித்தனர். எமது மாணவர்கள் பாராட்டுப் பெற்றனர்.



    13.09.2011

                                          உளநல நாள்

    இன்று யுனிசெவ் நிறுவன நிதி ஒதுக்கீட்டின் கீழ் “உளநல மேம்பாட்டுச் செயற்றிட்டம்” முன்னெடுக்கப்பட்டது. எமது வகுப்பறை பொம்மலாட்ட அரங்காகச் செயற்பட்டது. தென்மராட்சிக் கல்விவலய சித்திரபாட ஆசிரிய ஆலோசகர் திரு.நா.ராஜன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.





    04.08.2011

                                         சஞ்சிகை வெளியீடு -இதழ் 2
    “ஆலஞ்சிட்டு” இதழ் -2 கையெழுத்துச் சஞ்சிகை வெளியீடு நடைபெற்றது.



    06.07.2011 

    தரம் 2 வலயமட்டக் கோலப்போட்டி நடைபெற்றது.



      வலயமட்ட கோலப்போட்டி

    • பூ.சாருஜா - சிறப்புத் தேர்ச்சி



    இன்று தென்மராட்சிக் கல்வி வலயத்தில் நடைபெற்ற தரம் 2 - வாண்பாடு மனனப்போட்டியில் 11 மாணவர்கள் சிறப்புத் தேர்ச்சியடைந்தனர்.

    வாய்பாடு மனனப்போட்டி

    • பூ.சாருஜா
    •  பா.தர்மினி
    •  செ.திலக் ஷி
    •  செ.அஜந்தா
    •  சி.சர்மிகா
    • ஸ்.அஜீனா
    • செ.கோபினா
    • கி.கம்ஷிகன்
    • சோ.யேபிஷன்
    • க.டயாளினி
    • ச.கயல்விழி



    23.05.2011

    ENGLISH DAY

    இன்று மகிந்த சிந்தனையின் அடிப்படையில் பாடசாலையில் வகுப்பு ரீதியாக ENGLISH DAY நடைபெற்றது. தரம் 2 மாணவரும் ABOE பயிற்சிகள் பாடத்துடன் தொடர்புபடுத்தி உரையாடியும், "Siman Says " என்னும் விளையாட்டுப் போன்றும் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டனர்


    12.05.2011

    ஸ்தாபகர் தினம்

    இன்று ஸ்தாபகர் தினம் நடைபெற்றதால், கோயில் அபிஷேகத்திற்குச் சென்றனர்.




    11.05.2011

    புத்தாண்டு பொங்கல்

    இன்று புத்தாண்டு பொங்கல் பொங்கி மகிழ்ந்தனர்.




    08.04.2011

    பெற்றோர் சந்திப்பு


    இன்று முதலாம் தவணை இறுதிநாளில் பெற்றோர் சந்திப்பு நடைபெற்றது.




    03.04.2011

    இன்று தென்மராட்சிக் கல்வி வலயத்தில் நடைபெற்ற தரம் 2 - உறுப்பெழுத்துப்போட்டியில் இருமாணவர்கள் பங்குகொண்டு இரண்டாம் இடத்தையும், சிறப்புத் தேர்ச்சியையும் பெற்றுக் கொண்டனர். 


                                                               வலயமட்ட உறுப்பெழுத்துப்போட்டி

    • பூ.சாருஜா - இரண்டாம்  இடம் 
    • செ.திலக் ஷி(சிறப்புத்தேர்ச்சி)





    03.04.2011

    இன்று தென்மராட்சிக் கல்வி வலயத்தில் நடைபெற்ற தரம் 2 - IMACS போட்டியில் இருமாணவர்கள் சிறப்புத் தேர்ச்சியடைந்தனர்.

                                                             வலயமட்ட IMACSபோட்டி
    • செ.திலக் ஷி
    • கி.கம்ஷிகன்



    இன்று தென்மராட்சிக் கல்வி வலயத்தில் நடைபெற்ற தரம் 2 - திருக்குறள் மனனப்போட்டியில் 07 மாணவர்கள் சிறப்புத் தேர்ச்சியடைந்தனர்.

                                             வலயமட்ட திருக்குறள் மனனப்போட்டி

    •  பூ.சாருஜா
    •  பா.தர்மினி
    •  செ.திலக் ஷி
    •  செ.அஜந்தா
    •  சி.சர்மிகா
    • ஸ்.அஜீனா
    • செ.கோபினா



    25.03.2011

     கண்காட்சி

    இன்று இலங்கையின் பல்வேறு இனத்தவர் சங்கமிக்கும் நிகழ்வு கண்காட்சி நடைபெற்றது.


    இணையத்தளம் ஆரம்பம்


    • என்னால் ”சைவம்” என்னும் இணையத்தளம் ஒன்று  wordpress இல் ஆரம்பிக்கப்பட்டது.


    18.02.2011

    இன்று தென்மராட்சிக் கல்வி வலயத்தில் நடைபெற்ற தரம் 2 - அறநெறிப்போட்டியில் 06 மாணவர்கள் சிறப்புத் தேர்ச்சியடைந்தனர்.

                                          வலயமட்டஅறநெறிமனனப்போட்டி-
    •   பூ.சாருஜா

    •   பா.தர்மினி

    •   செ.திலக் ஷி

    •  செ.அஜந்தா

    •  சி.சர்மிகா

    •  ஸ்.அஜீனா



    26.01.2011

    இன்று முதன்மைநிலை ஒன்றுக்கான மாணவர்மன்றம் ஆரம்பிக்கப்பட்டு, மன்ற நிர்வாகிகள் தெரிவு இடம்பெற்றது. 

    மாணவர்மன்றம்

    • தலைவர்             - செல்வி.பூ.சாருஜா
    •  செயலாளர்       - செல்வி பா.தர்மினி
    •  பத்திராதிபர் -செல்வி செ.திலக் ஷி
    • இவர்களுடன் வகுப்புப் பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்பட்னர்.



    18.01.2011 - 

    கால்கோள் விழா 

    இன்று தரம் 1 மாணவர்களுக்கான கால்கோள் விழா எமது வகுப்பு(தரம் 2) மாணவர்களால் நிகழ்த்தப்பட்டது. முதன்மை விருந்தினராக தென்மராட்சிக் கல்விவலய உதவிக் கல்விப் பணிப்பாளர்(ஆ.க) திரு.த.ஸ்ரீஸ்கந்தராசா அவர்களும், சிறப்பு விருந்தினராக சமய அன்பரும் முன்னைநாள் எமது பாடசாலையின் பகுதித் தலைவருமான திருமதி சி.சின்னத்தம்பி அவர்களும் , பாடசாலை S.D.C. வலயப்பிரதிநிதி திருமதி ஹே.கந்தசாமி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.



    2010

    சஞ்சிகை வெளியீடு - இதழ் -1
    • மூன்றாம் தவணை இறுதியில் ஒவ்வொரு மாணவராலும் ஆக்கிய “ஆலஞ்சிட்டு - இதழ் 1”கையெழுத்துச் சஞ்சிகையை ஆசிரியரிடம் இருந்து பெற்று, அதிபர் திருமதி ல.முகுந்தன் அவர்கள் வெளியீடு செய்து, பெற்றோரிடம் கையளித்தார். 


    பாடசாலைமட்டச் சஞ்சிகைப் போட்டி


    பாடசாலைமட்டச் சஞ்சிகைப் போட்டிக்காக தரம் 1 மாணவர்கள் இணைந்து வகுப்புக்கென “ஆலஞ்சிட்டு”  என்னும் சஞ்சிகையொன்றை ஆக்கிப் பாராட்டுப் பெற்றனர்.



    இன்று தென்மராட்சிக் கல்வி வலயத்தில் நடைபெற்ற தரம் 1 - உறுப்பெழுத்துப்போட்டியில் ஒருமாணவி சிறப்புத் தேர்ச்சியைப் பெற்றுக் கொண்டார். 

                                   வலயமட்ட உறுப்பெழுத்துப் போட்டி

    • செ.திலக் ஷி(சிறப்புத்தேர்ச்சி)


    28.03.2010

    09.07.2010

    முன்னாள் அதிபரின் சேவைநலன் பாராட்டு விழாவில் பூ.சாருஜா வரவேற்பு நடனம் வழங்கினார்.



    2010 -Family school level -ABOE Competition

     Key Stage 1   -          1st Place  


    தரம் 1 வலயமட்டக் கோலப்போட்டி நடைபெற்றது.
    வலயமட்ட கோலப்போட்டி
    • பூ.சாருஜா - முதலாம்  இடம்


    25.05.2010

    இன்று புத்தாண்டுப் பொங்கல் பொங்கி மகிழ்ந்தனர்.


    20.03.2010 

      வாசிப்புச் செயற்பாடுகளை மேற்கொண்டு மாணவர்களின் ஆற்றல்கள் மதிப்பிடப்பட்டன.

    15.03.2010

    இணையத்தள வெளியீடு 
    ஆசிரியரின்(எனது) இவ்விணையத்தளத்தையும், www.thasooriya.blogspot என்னும் கல்விசார் இணையத்தளத்தையும் அதிபர் திருமதி ல.முகுந்தன் அவர்கள் பார்வையிட்டார்.


    10.02.2010 இப்பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று வந்தேன்.


    No comments:

    Post a Comment